SELANGOR

பொது இடங்களில் கால்நடைகளுக்கு அனுமதித்த 2 கால்நடை பண்ணை உரிமையாளர்களுக்கு அபராதம்!

கோல சிலாங்கூர், பிப்.1:

கண்காணிப்பு ஏதுமின்றி கால்நடைகளை தன்னிச்சையாக நடமாட அனுமதித்த இரு கால்நடை வளர்ப்பவர்களுக்கு எதிராக கோல சிலாங்கூர் மாவட்ட மன்றம் (எம்டிகேஎஸ்) அபராதம் விதித்தது.

பெஸ்தாரி ஜெயா தாமான் ஸ்ரீ பஞ்சாரான் மற்றும் ஜெராம் ஜாலான் ராஜா அப்துல்லா ஆகிய பகுதிகளில் கால்நடை பண்ணை வைத்திருக்கும் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு 19711ஆம் ஆண்டு பசுக்கள் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டதாக எம்டிகேஎஸ் தலைவர் ராஹிலா ரஹ்மாட் கூறினார்.

பொது போக்குவரத்து சாலைகள் மற்றும் வீடமைப்புப் பகுதிகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதாக பொது மக்களிடமிருந்து பெற்ற புகார்களின் அடிப்படையில் இந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

‘’சாலை பயனீட்டாளர்களும் வளர்ப்பு மிருகங்களும் சம்பந்தப்பட்ட விபத்துகள் நடைபெறும் ஜெராம் மற்றும் பெஸ்தாரி ஜெயா பகுதிகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது’’ என்றார் அவர்.


Pengarang :