SELANGOR

பொது டெண்டர் முறையால் வெ.990 மில்லியன் சேமிப்பு

செமினி, பிப்.28-

சிலாங்கூர் அரசாங்கம் பொது டெண்டர் முறையை அமல்படுத்தியதால் மொத்தம் 990 மில்லியன் வெள்ளியைச் மிச்சப்படுத்த முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தொகையில் 68 மில்லியன் வெள்ளி கடந்தாண்டு மிச்சப்பட்டதாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்த 8 ஆண்டுகளாக மாநில அரசாங்கம் இந்த பொது டெண்டர் முறையை அமல்படுத்தி வருகிறது. முந்தைய அரசு சம்பந்தப்பட்ட குத்தகையாளர்களுக்கு நேரடியாக டெண்டர் வழங்கி வந்ததால், அவற்றுக்கான விலை நியாயமாக இருந்ததில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார்.

“இந்த அரசாங்கத்தின் அமலாக்க முறையினால், 990 மில்லியன் வெள்ளியைச் சேமிக்க முடிந்ததோடு அவற்றை ஐபி ஆர் எனப்படும் மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவிட முடிந்தது” என்று அமிருடின் குறிப்பிட்டார்.


Pengarang :