NATIONAL

பொருளாதார மந்த நிலை : வாய்ப்புகளைச் சாதகமாகப் பயன்படுத்த வேண்டும்!

சுபாங் ஜெயா, பிப்.12:

உலக நாடுகள் பொருளாதார சவால்களை எதிர்நோக்கும் வேளையில், நாடு அதிகமான முதலீடுகளை கவர்ந்திழுக்கும் என்று பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி நம்பிக்கை தெரிவித்தார்.

தற்போது சீனாவுக்கும் அமெரிக்காவும் இடையிலான வணிகப் போர் உச்சக் கட்டத்தை அடைந்துள்ள வேளையில், இதனை எதிர்கொள்ளும் ஆற்றலை மலேசியா கொண்டிருப்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

“இந்த ஆற்றலை நாம் கண்டறிந்தால், இந்த விவகாரத்தை மிகச் சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்” என்று இங்கு சன்வே ரிசோர்ட்டின் நடைபெற்ற சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் உரை நிகழ்த்திய போது அஸ்மின் தெரிவித்தார்

அரசு நிர்வாகத்தை வலுப்படுத்த எடுக்கப்படும் வியூகம் மற்றும் நடவடிக்கைகள் யாவும் நாட்டின் எதிர்கால பொருளாதார குறித்து முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று அஸ்மின் நம்பிக்கை தெரிவித்தார்.


Pengarang :