NATIONAL

மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவீர்!

குவாந்தான், பிப்.6:

மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கான நடவடிக்கைகளில் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் உடனடியாக ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை மெத்தனமாகக் கருதக்கூடாது. இது மேலும் மோசமடையாமால் இருக்க இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று கெஅடிலான் தலைமை பொருளாளர் லீ சியான் சோங் வலியுறுத்தினார்.

“மக்கள் வழங்கும் அனைத்து அறிகுறிகளையும் நாம் கடுமையாகக் கருத வேண்டும். சில அமைச்சர்கள் மற்றும் தெளிவற்ற கொள்கைகள் மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர். இது தற்காலிகமாகவும் இருக்கலாம்” என்றார் லீ.

ஆனால், பாக்காத்தான் மீதான மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்” என்று இங்கு தனது இல்லத்தில் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பின்போது செய்தியாளர்களிடத்தில் அவர் பேசினார்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினத்தினால் மக்கள் தொடர்ந்து சிரமத்தை எதிர்நோக்கி வருவதால் பொருளாதார மேம்பாட்டிலும் பக்காத்தான் கவனம் செலுத்துவது அவசியம்” என்று லீ சுட்டிக் காட்டினார்.


Pengarang :