NATIONAL

மக்களுக்கு உதவ பல்வேறு நடவடிக்கைகளை பாக்காத்தான் அரசு முன்னெடுக்கும்

செமினி, பிப்.25:

நான்கு நெடுஞ்சாலைகளை அண்மையில் அரசு தம்வசமாக்கியது உட்பட மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறது.

“மக்கள் எதிர்நோக்கி வரும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு, ரப்பர் மற்றும் செம்பனை விலை சரிவு போன்ற பிரச்னைகளுக்கு விரைவில் நல்லதொரு தீர்வு காண அரசாங்கம் தொடர்ந்து முயன்று வருகிறது” என்று பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் துணைத் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.

“பால்வெட்டுத் தொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் நிதிப் பற்றாக்குறை பிரச்னை, செம்பனை எண்ணெய் விலை சரிவு, விலைவாசி உயர்வு போன்ற மக்களின் அன்றாடப் பிரச்னைகளை நடப்பு அரசாங்கம் கவனிக்காமல் இருப்பதாக எதிர்கட்சியினர் பேசி வருகின்றனர்” என்றார் அவர்.

ஆனால், அண்மையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மக்களின் சுமைகளைக் குறைக்கும் புதிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது என்ற தகவலை உள்துறை அமைச்சருமான டான்ஸ்ரீ முஹிடின் வெளியிட்டார்.


Pengarang :