NATIONAL

மக்கள் குடிசை வீடுகளில் வாழும் வரையில் நாட்டின் துரித வளர்ச்சிக்கு அர்த்தமில்லை

பூச்சோங், பிப்.18:

மக்களில் பலர் ஏழ்மையான சூழ்நிலையில் குடிசை வீடுகளில் வாழுகின்ற வரையில் நாடு அடைந்து வரும் துரித வளர்ச்சிக்கு அர்த்தமேதும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, நாட்டின் பொருளாதாரத்திற்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தி மக்களின் சுபிட்சமான வாழ்க்கைக்கு கட்டுப்படி வீடுகளைக் கட்டித் தர பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் முயன்று வருகிறது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.

மக்கள் தொடர்ந்து குடிசைகளில் வாழ்ந்து வரும் வேளையில் நாடு மேம்பாடடைந்துள்ளது என்று கூறிக் கொள்வதில் அர்த்தமில்லை என்று தேசிய சமூக கொள்கை அறிமுக விழாவில் ஆற்றிய உரையில் மகாதீர் தெரிவித்தார்.

மக்கள் வசதியான வீடுகளில் குடியேறுவதோடு ஆரோக்கியமாக வாழ்வதும் அவசியமாகும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஆரோக்கியமான சமூகத்தைத் தோற்றுவிக்கும் வகையில் குடியிருப்பாளர்கள் சங்கங்கள் உருவாக்கப்படுவது ஒரு சிறந்த நடவடிக்கையாகும் என்று அவர் வர்ணித்தார்.


Pengarang :