NATIONAL

மக்கள் வாழ்வாதாரப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதே ஈஏசியின் நோக்கம்

சிப்பாங், பிப்.12:

மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்கு ஆக்கப்பூர்வமான ஒரு தீர்வைக் காண்பதில் தேசிய பொருளாதார நடவடிக்கை (ஈஏசி) மன்றம் கவனம் செலுத்தும்.

உடனடியாக தீர்வு காண வேண்டிய விவகாரங்கள் இருப்பதால் அவற்றைக் களைவதற்கு சில நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்று பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார்.

“நம்மிடம் நீண்ட கால மற்றும் குறுகிய கால கொள்கைகள் ஏற்கனவே உள்ளன. எனவே, இப்போது அந்த கொள்கைகளை ஆக்கப்பூர்வமாக அமலாக்கம் செய்வதில் இம்மன்றம் கவனம் செலுத்தும்” என்றார் அவர்.

அவற்றில் மிகவும் முக்கியமானவையாக கருதப்படும் வாழ்க்கைச் செல்வினம் அதிகரிப்பையும் பொருட்களின் விலைவாசி ஏற்றத்தையும் களைவதே மன்றத்தின் முதன்மை இலக்காக உள்ளது என்றும் அவர் சொன்னார்.


Pengarang :