SELANGOR

மணல் விற்பனை ஆண்டுக்கு வெ.90 மில்லியனை எட்டியது

செமினி, பிப். 16:

பக்காத்தான் அரசாங்கம் சிலாங்கூர் மாநிலத்தை ஆட்சி புரியத் தொடங்கியது முதல் இம்மாநிலத்தின் மணல் விற்பனை ஆண்டுக்கு 90 மில்லியன் வெள்ளியை எட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.

முந்தைய அரசாங்கத்தின் கீழ் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை மணல் விற்பனை வாயிலாக ஆண்டுக்கு 3 மில்லியன் வெள்ளி முதல் 4 மில்லியன் வெள்ளி வரை மட்டுமே பதிவு செய்யப்பட்டதாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

எனினும், 2008 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து சில ஆண்டுகளில் பக்காத்தான் மணல் விற்பனையை ஆண்டுக்கு 15 மில்லியன் வெள்ளியாக அதிகரித்ததை அவர் சுட்டிக் காட்டினார்.

“வருமானத்தை ஈட்டுவதில் மட்டுமே இம்மாநிலம் முன்னேற்றம் காணவில்லை. மாறாக, இந்த வருமானத்தை பெடுலி செஹாட் (ஐபிஆர்) வழி மாநில மக்களுக்குத் திரும்பி ஒப்படைக்கும் ஆற்றலையும் பெற்றுள்ளது.

செமினி பொது மண்டபத்தில் நடைபெற்ற ஐபிஆர் மற்றும் நில பத்திரத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகையில் மந்திரி பெசார் இதனைக் குறிப்பிட்டார்.


Pengarang :