SELANGOR

மந்திரி பெசாருடன் ஒன்றிணைந்த பயணம் பல்கலைக்கழகத்திற்கு விரிவாக்கம்

செர்டாங், பிப். 20:

சிலாங்கூர் மக்களை அணுகும் முயற்சியாக மாநில மந்திரி புசாருடனான ஒருங்கிணைந்த மேம்பாட்டு பயண திட்டம் பல்கலைக்கழக நிலையில் விரிவாக்கம் காணப்பட்டுள்ளது.

மாநில அரசாங்கத்தின் இத்திட்டம் குறித்து மந்திரி பெசார் அமிருடின் ஷாரி மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தில்  (யுபிஎம்) நேற்று விளக்கமளித்தபோது இது பல்கலைக்கழக நிலையில் அதிகாரப்பூர்வமாக விரிவாக்கம் கண்டது.

இத்திட்டமானது பல்கலைக்கழக தரப்பினருடன் தான் நேரடி தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தியிருப்பதாக சிலாங்கூர் செய்தியாளர்களிடம் அமிருடின் பேசினார்.

“இப்பயணம் வாயிலாக சிலாங்கூர் வாசிகளுக்காக மாநில அரசாங்கம் பிரத்தியேகமாக அமல்படுத்தி வரும் திட்டங்களையும் கொள்கைகளயும் மக்களிடத்தில்  நாங்கள் எடுத்துரைக்க விரும்புகிறோம்” என்றார் மந்திரி புசார்.

“டவுன் ஹோல், ஸ்மார்ட் சிலாங்கூர் போன்ற திட்டங்கள் இவற்றில் அடங்கும். மக்கள் இவற்றை நேரிடையாகக் காணலாம்” என்றும் அவர் கூறினார்.


Pengarang :