NATIONAL

மான உணர்வு இல்லாத ‘போஸ்கூ’

செமினி, பிப்.19:

‘போஸ்கூவிற்கு என்ன வெட்கம்’ என்ற சுலோகத்துடன் களமிறங்கியுள்ள டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கின் பேச்சால் கவரப்பட்டு எத்தனை முறைதான் ஓட்டு போடுவது என்று செமினி சட்டமன்றத் தொகுதி வாக்காளர்கள் சிந்திப்பது அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது.

அவரைச் சந்திக்கவும் நகைச்சுவையான உரையாடலை செமிமடுக்கவும் அந்தக் கூட்டங்களில் கலந்து கொள்வதில் தவறேதும் இல்லை ஆனால் பிரதமர் பதவியில் இருந்த போதும் அதற்கு பின்னரும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மக்கள் எடைபோட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில பக்காத்தான் கூட்டணி தலைவர் அமிருடின் ஷாரி நினைவுறுத்தினார்.

“நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் முன்னாள் பிரதமர் ஒருவர், எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்” என்றார் அவர்.

“உண்மையில் மான உணர்வு இல்லாத மனிதர் இவர்” என்று கம்போங் ரிஞ்சிங் ஹிலிரில் உரையாற்றிய அமிருடின் கூறினார்.

அதேவேளையில், 60 ஆண்டுகள் ஆட்சி புரிந்த தேசிய முன்னணி அரசாங்கத்துடன் ஆட்சியில் அமர்ந்து வெறும் 9 மாதங்கள் மட்டுமே ஆன பக்காத்தான் அரசாங்கத்தை ஒப்பிடுவது சரியில்லை என்றார் அவர்.


Pengarang :