NATIONAL

மேம்பாட்டுத் திட்டங்கள் வாக்குகள் சேகரிப்பதற்காக அல்ல!

புத்ரா ஜெயா, பிப்.16:

செமினியில் மாநில அரசு மேற்கொள்ளும் மேம்பாட்டு நடவடிக்கைகள் யாவும் வாக்குகள் சேகரிக்கும் நோக்கத்திலானவை அல்ல என்பதால் அவற்றை தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானவை எனக் கருதமுடியாது..

சிலாங்கூர் மாநில அரசாங்கமும் சட்டமன்றமும் செயல்படும் நேரத்தில் இந்த இடைத்தேர்தல் நடைபெறுவதால், இந்த மேம்பாட்டு நடவடிக்கைகள் தேர்தல் விதிமுறைகளை மீறியதாகக் கருத முடியாது என்று தேர்தல் ஆணையத் தலைவர் அஸார் ஹருண் கூறினார்.

“மாநிலத்தில் ஆட்சி நடக்கும் போது அரசு நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டே இருக்கும். அவற்றை வாக்குகளைக் கவரும் நடவடிக்கையாக கருதப்படாது” என்று அவர் தெளிவுப்படுத்தினார்.

ஆயினும், இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டால், நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பே இறுதியானது என்றும் அவர் சொன்னார்.


Pengarang :