NATIONAL

வரவு செலவுத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை

கோலாலம்பூர், பிப்.28-

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததை அடுத்து 2019 வரவு செலவுத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

எண்ணெய் விலையின் நிலையற்ற தன்மை காரணமாக இது ஏற்பட்டுள்ளதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறினார்.

இந்த விலை எந்த அளவு குறைகிறது என்பதைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை அமையும் என்றும் வரவு செலவுத் திட்டத்தை உடனடியாக மறு ஆய்வு செய்யவேண்டிய அவசியம் இங்கு ஏற்படவில்லை என்றும் அவர் சொன்னார்.

எண்ணெய் விலை ஏற்றம் காணும்போது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமது துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவுடன் சேர்ந்து இங்குள்ள இஸ்தானா புடாயாவில் 2019 ஓலா போலா இசை நிகழ்ச்சியைக் கண்டுகளித்த பின்னர் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் மகாதீர் தெரிவித்தார்.


Pengarang :