SELANGOR

வரி, அபராதம் உட்பட பல்வேறு கட்டணங்களை விரைவாக செலுத்த கியோஸ்கை பயன்படுத்துவீர்

பெட்டாலிங் ஜெயா, பிப்.11:

வரி கட்டணம், அபராதம், முன்பதிவு கட்டணம், பல்வேறு பில் கட்டணம் மற்றும் பாதுகாப்பு கட்டணம் (ரொக்கம்) போன்றவற்றை விரைவாக செலுத்துவதற்கு ஏதுவாக கியோஸ்க் இயந்திரத்தை பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழகம் அறிமுகப்படுத்தவுள்ளது. முகப்பிடங்களில் குறிப்பாக அலுவலக நேரத்தில் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயனீட்டாளர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்கவும் வாடிக்கையாளர்கள் எளிதான முறையில் கட்டணங்களைச் செலுத்துவதற்கும் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக எம்பிபிஜே தொடர்பு பிரிவு ஊடக செயலாளர் தெரிவித்தார்.

மேலும், இந்த கியோஸ் காலை 7 மணி தொடங்கி இரவு 9 மணி வரையிலும் ஓய்வு நாட்கள் மற்றும் பொது விடுமுறை உட்பட அனுதினமும் செயல்படுவது இதன் மற்றொரு சிறப்பாகும் என்றார் அவர்.

எம்பிபிஜே தலைமையகத்தில் 2 இயந்திரங்கள் பொருத்தப்படும் வேளையில் மெனாரா எம்பிபிஜே வரவேற்பரையில் ஒன்றும் கோத்தா டாமன்சாராவில் உள்ள எம்பிபிஜே உத்தாரா கிளையில் ஒன்றும் பொருத்தப்படும் என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.


Pengarang :