SELANGOR

வான்வெளி தொழில்துறை மூலம் வெ.12 பில்லியன் வருவாய்!

ஷா ஆலம், பிப்.26-

தேசிய நிலையிலான வான்வெளி தொழில்துறை மற்றும் விமானத் துறை வழி 12 பில்லியன் வெள்ளிக்கும் கூடுதலான வருமானம் ஈட்டும் வாய்ப்புள்ளதாக ஃப்ரோஸ்ட் & சுல்லிவன் ஆய்வறிக்கை கூறுகிறது.

இத்துறையில் கிடைக்கக்கூடிய வருவாயைக் கண்ணுறும்போது, சிறந்த எதிர்காலத்தைக் கொண்டுள்ள இத்துறைக்கு இந்த வட்டார நாடுகளில் மிகவும் பொருத்தமான இடமான மலேசியாவில் குறிப்பாக சிலாங்கூரில் இது விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று துறைமுகத் தொழில்துறை மற்றும் சிறு நடுத்தர வர்த்தகத் தொழில்துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் வலியுறுத்தினார்.

“மாநிலம் அமைந்துள்ள இடமானது இத்துறைக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதோடு இதர மாநிலங்கள் மற்றும் வட்டார நாடுகளோடு ஒப்பிடுகையில் இங்கு இத்துறைக்குத் தேவையான திறனாற்றல் அம்சம் அதிகம் இருப்பதும் ஒரு சிறப்பாகும்” என்றார் அவர்.

“இந்தத் துறைக்கு பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிடம் இருந்து கடும் போட்டியை எதிர்நோக்கிய போதிலும், இந்தப் பொன்னான வாய்ப்பை நாம் நழுவ விடக்கூடாது” என்றும் அவர் சொன்னார்.


Pengarang :