SELANGOR

வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டம் மாநில அரசு துல்லியமாக ஆராயும்!

அம்பாங் ஜெயா, பிப்.11-

வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு முன்னர் மாநில அரசு அதை மிகத் துல்லிதமாக ஆராய்ந்து வருகிறது.

இதில் தொழில்நுட்ப அம்சம் சம்பந்தப்பட்டுள்ளதால், இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு சில காலம் ஆகலாம் என்று சுகாதார, சமூகநலன், மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மஹ்முட் கூறினார்.

“வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தில் தேவையான பொருட்களை அனுப்புவது, அவற்றை சேகரிப்பது மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சன்மானம் வழங்குவது போன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றிருப்பதையே தொழில்நுட்ப அம்சம் என்று இங்கு குறிப்பிடப்படுகிறது” என்றார் அவர்.

“மேலும், இந்தத் திட்டத்தில் ஈடுபடுவோரில் பெரும்பாலோர் “சிலாங்கூர் காசே ஈபு விவேக அட்டையை” வைத்துள்ளனர்கள். அவர்களால் வீட்டை விட்டு வெளியே செல்ல இயலாது, எனவே நாம்தான் இவற்றைத் தயார் செய்ய வேண்டிய சூழல்” என்று அவர் விளக்கமளித்தார்.


Pengarang :