NATIONAL

ஹராப்பான் நிதி நிறுத்தம் வெ. 202.72 மில்லியன் திரட்டப்பட்டது

ஷா ஆலம், பிப்.7:

மக்களின் அபரிமித ஆதரவைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 2 ஆம் தேதி கூடிய அமைச்சரவைக் கூட்டம் தாபோங் ஹராப்பானுக்கான கால வரம்பை மேலும் 2 வாரங்களுக்கு (ஜன. 2- ஜன 14) நீட்டிக்கப்பட்டிருந்த இந்நிதி மூலம் மொத்தம் வெ. 202,716,775.10 திரட்டப்பட்டுள்ளது.

இந்தக் காலக் கட்டத்திற்குப் பின்னர் இந்த கணக்கில் சேர்ப்பிக்கப்பட்ட நிதி அதை வழங்கியவரிடமே திரும்பத் ஒப்படைக்கப்படும், என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

தேசிய கணக்காய்வு துறை இந்த நிதியை கணக்காய்வு செய்வதற்குரிய நடவடிக்கைகளை நிதியமைச்சு தற்போது மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.

“கூட்டரசு அரசாங்கத்தின் கடன் சுமையைக் குறைக்க இந்த நிதி பயன்படுத்தப்படும்” என்றார் அவர்.

இந்நிதி நேர்மையாகவும் முறையாகவும் நிர்வகிப்படுவதற்காக, இந்த நிதியைத் தோற்றுவித்த அறங்காவலர்களின் உத்தரவுகளின் படி கருவூலத்தின் தலைமைச் செயலாளர் டத்தோ அகமது பத்ரி முகமது ஜாஹிர் தலைமையில் ஒரு கணக்காய்வாளர் செயற்குழு அமைக்கப்பட்டுள்ளதாக லிம் தெரிவித்தார்.


Pengarang :