NATIONAL

4.7 % வளர்ச்சி விகிதம் பொருளாதாரம் மேலும் வலுவடையும்

புத்ரா ஜெயா, பிப்.15:

நாட்டின் பொருளாதாரம் கடந்த 2018 -இல் 4.7 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளானது இவ்வாண்டு இன்னும் சிறந்த அடைவு நிலையை அடைய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

இந்த வளர்ச்சி விகிதம் திட்டமிடப்பட்ட இலக்கான 4.8 விழுக்காட்டைக் காட்டிலும் 0.1 விழுக்காடு குறைவாக இருப்பினும் உலகளவிலான பொருளாதார மந்த நிலை மற்றும் அமெரிக்காவுக்கும் சீனாவிற்கும் இடையே நிகழும் வணிகப் போர் ஆகியவற்றுக்கு மத்தியில் இந்த அடைவு நிலை திருப்திகரமாக இருப்பதாக அவர் சொன்னார்.

“இந்த விவகாரத்தை உலகளவிலான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். ஏனெனில், இதர நாடுகளின் பொருளாதாரமும் பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளன” என்று லிம் சுட்டிக் காட்டினார்.

“இந்த சூழ்நிலையில், மலேசியா 4.7 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதானது ஒரு சிறந்த அடைவு நிலை என்றே கருதவேண்டும்” என்றார் அவர்.


Pengarang :