இந்து சமயத்தை இழிவுபடுத்திய ஆடவர் கைது! | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

இந்து சமயத்தை இழிவுபடுத்திய ஆடவர் கைது!

கோலாலம்பூர், மார்ச் 12-

முகநூல் வாயிலாக இந்து சமயத்தை இழிவு படுத்தும் கருத்தை பதிவு செய்த ஆடவர் ஒருவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிற்கும் சூழல், பகை, மோதல், வெறுப்புணர்வு ஆகியவற்றை ஏற்படுத்தும் நபர்கள் மீது 298ஏ குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படும். இதன் தொடர்பில் 52 வயதுடைய ஆடவர் ஒருவரை போலீசார் தடுத்து வைத்துள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ முகமது ஃப்ஸி ஹருண் தெரிவித்தார்.


மேலும் இந்த விவகாரம் தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் பொது தொடர்பு சேவை மற்றும் வசதியை தவறாகப் பயன்படுத்தியதற்கு 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் கீழ் 233 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.

“சமூக வலைத்தளங்கள் மற்றும் எந்தவொரு ஊடகத்தையும் நாட்டில் இனங்களுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தக் கூடிய விவகாரங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது” என்று பொது மக்களுக்கு முகமது ஃபுஸி அறிவுறுத்தினார்.

RELATED NEWS

Prev
Next