இன்பென்ஸ் கல்லூரி எம்பிபி தேர்தல் சமுகமாக நடந்தது | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

இன்பென்ஸ் கல்லூரி எம்பிபி தேர்தல் சமுகமாக நடந்தது

கோலசிலாங்கூர், மார்ச் 13-

இன்பென்ஸ் அனைத்துலக கல்லூரியின் மாணவர் பிரதிநிதி (எம்பிபி) தேர்தல் சுமுகமாக நடைபெற்றது. இக்கல்லூரியில் ஜனநாயக முறை சிறப்பாக அமல்படுத்தப்படுவதை இது உறுதி செய்துள்ளது.

கடந்த மார்ச் 10ஆம் தேதி நடந்த தேர்தல் நடவடிக்கை எந்தவொரு அசம்பாவிதமும் இன்றி சுமுகமாக நடைபெற்று முடிந்தது என்று இதன் மாணவர் விவகாரப் பிரிவு அதிகாரி நூர் அட்னின் ஷாமில் ஹாலிக் பாஷா கூறினார்.


இந்தத் தேர்தலில் போட்டியிட்ட 44 வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டன என்றார் அவர்.

பொதுத் தேர்தலில் அமல்படுத்தப்படும் நடைமுறைகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தேர்தலில் மொத்தம் 314 அல்லது 59.92 விழுக்காட்டு மாணவர்கள் வாக்களித்தனர் என்று அவர் தெரிவித்தார்..

வாக்களித்த மாணவர்கள் யாவரும் 21 வயதுக்கும் குறைவானவர்கள் என்பதால் இந்தத் தேர்தல் நடைமுறையின் மூலம் பொதுத் தேர்தலில் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை அவர்களால் நேரடியாக உணர முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

RELATED NEWS

Prev
Next