உயர் தொழில்திறனில் சிலாங்கூர் முன்னோடியாக திகழும்! | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

உயர் தொழில்திறனில் சிலாங்கூர் முன்னோடியாக திகழும்!

ஷா ஆலம், மார்ச் 11-

மந்திரி பெசார் அமிருடின் ஷாரி மாநில அரசாங்க பேராளர் குழுவிற்கு தலைமையேற்று ஜெர்மன் சென்றுள்ளார். இப்பேராளர் குழுவினர் அடுத்த புதன்கிழமை வரை அங்கு தங்கிருப்பர்.

இந்த பயணத்தின் போது இக்குழுவினர் சில தொழிற்துறை நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவர். மேலும், பெர்லினில் உள்:ள ஐரோப்பிய நிர்வாக மற்றும் தொழில்நுட்ப பள்ளியையும் போன் கல்லூரியில் நடைபெறும் தொழில்துறைக் கல்வி பயிற்சியையும் இவர்கள் பார்வையிடுவர்.


இது தவிர்த்து, மூனிக்கில் உள்ள மூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கும் அமிருடின் வருகை அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, விரைவில் சிலாங்கூர் ஒரு வெற்றிகரமான மாநிலமாகவும் போட்டியாற்றல்மிக்க மாநிலமாகவும் திகழும் என்று சிலாங்கூர் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு துறை பொறியியல் கழக இயக்குநர் முஹிடின் அரிஃபின் நம்பிக்கை தெரிவித்தார்.

RELATED NEWS

Prev
Next