Selangorkini
SELANGOR

கேடிஇபி நிறுவனத்தை அறிவோம் நிகழ்ச்சி

சபாக் பெர்ணம், மார்ச் 18-

ஒரு பகுதியில் மேற்கொள்ளப்படும் துப்புரவு பணிகள் குறித்து அப்பகுதி மக்கள் அறிந்து கொள்வதற்கு ஒரு தடமாக கேடிஇபி திடக்கழிவு நிர்வாக நிறுவனத்தை அறிவோம் எனும் நிகழ்ச்சி அமைந்துள்ளது. 360 விவேக சிலாங்கூர் பயணத்தின் ஒரு பகுதியாக இந்நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.

கண்காட்சி தவிர்த்து திடக் கழிவு தொடர்பான புகார்களை தெரிவிக்க வேண்டிய சரியான நடைமுறைகளும் இதில் விளக்கமளிக்கப்படுகிறது என்று கேடி இபி எம்டபள்யூ எம் நிறுவனத்தின் பொதுத் தொடர்பு மற்றும் நிர்வாகப் பிரிவுத் தலைவர் மாஹ்ஃபுஸா முகமது தார்மிடி கூறினார்.

அளிக்கப்படும் புகார் முறையாகவும் வரிசையாகவும் இருப்பதோடு விவேகமாகவும் இருப்பதற்கு ஏதுவாக ஐகிளின் செயலியை சபாக் பெர்ணம் குடியிருப்பாளர்கள் பதிவிறக்கம் செய்வதையும் இந்நிகழ்ச்சி ஊக்குவிக்கும் என்றும் அவர் சொன்னார்.

எனவே, இந்த பயணத் திட்டத்தில் இந்த நிறுவனம் குறித்த தகவல்களை பொது மக்கள் அறிந்து கொள்ள முடியும். அதேவேளையில், இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பொது மக்களுக்கு நிறுவனப் பணியாளர்களே நேரடியாக விளக்கம் அளிப்பார்கள் என்றார் அவர்.


Pengarang :