சீ போட்டியில் பதக்கங்களை குவித்த மீராஷா பணி ஓய்வு பெற்றார் | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

சீ போட்டியில் பதக்கங்களை குவித்த மீராஷா பணி ஓய்வு பெற்றார்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 13-

ஜாக்கர்த்தாவில் 1979ஆம் ஆண்டு நடைபெற்ற சீ விளையாட்டுப் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்ற மீராஷா சின்னையா பணி ஓய்வு பெற்றார். பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்தில் கடந்த 43 ஆண்டுகளாக பொது சுகாதார உதவியாளராக பணியாற்றிய பின்னர் கனத்த இதயத்தோடு இன்று பணி ஓய்வு பெற்றார்.

சுமார் அரை நூற்றாண்டு காலம் எம்பிபிஜேவில் பணியாற்றினார். மெது நடை போட்டிகளின் மூலம் பல பதக்கங்களை தாம் வென்றுள்ளதாக மீராஷா கூறினார்.


விளையாட்டு போட்டியில் தனக்கு இருக்கும் ஈடுபாட்டை அறிந்து பல்வேறு பந்தயங்களில் தான் பங்கேற்க இந்த மன்றம் உறுதுணையாக இருந்ததாக கூறிய மீராஷா, பல இனிய நினைவுகளோடு இந்த மாநகராட்சி மன்றத்தில் இருந்து விடைபெற்றுக் கொள்வதாக சொன்னார்.

எம்பிபிஜே ஓர் ஊராட்சி மன்ற நிலையில் இருந்து நகராண்மைக் கழகமாக முன்னேறி இன்று மாநகராட்சி மன்றமாக உயர்ந்தது வரையில் தான் இதில் பணியாற்றி வந்துள்ளதாக அவர் பெருமையுடன் நினைவுகூர்ந்தார்.

RELATED NEWS

Prev
Next