சுங்கை கிம் கிம் விவகாரம்: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

சுங்கை கிம் கிம் விவகாரம்: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது

ஜோகூர் பாரு, மார்ச் 14-

சுங்கை கிம் கிம் ஆற்றில் ரசாயனக் கழிவுகள் வீசப்பட்டதால் ஏற்பட்ட தூய்மைக்கேடு விவகாரத்தில் மாநில அரசாங்கம் மிகவும் தாமதமாகச் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சிகளை ஜோகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஒஸ்மான் சப்பிதான் சாடினார்.

கடந்த வியாழக்கிழமை இந்த சம்பவம் நடந்த உடனேயே இந்த விவகாரத்திற்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்கத் தொடங்கிவிட்டது என்று இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் நலம் விசாரித்தபோது செய்தியாளர்களின் டத்தோ ஒஸ்மான் தெரிவித்தார்.


பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பம் மற்றும் பாதுகாவல் அதிகாரி ஆகியோருக்கு உதவிகள் வழங்கியதோடு சுங்கை கிம் கிம்மை தூய்மைப் படுத்தும் நடவடிக்கைக்கு 6.4 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு உட்பட இதர ஏற்பாடுகளையும் தமது தரப்பு செய்துள்ளதாக அவர் சொன்னார்.

எதிர்க்கட்சியினர் களத்தில் இறங்காமலேயே யூகத்தின் அடிப்படையில் குற்றஞ்சாட்டுகின்றனர் என்றார் அவர்.

RELATED NEWS

Prev
Next