நாடாளுமன்ற கூட்டத் தொடரை மாமன்னர் தொடக்கி வைத்தார் | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

நாடாளுமன்ற கூட்டத் தொடரை மாமன்னர் தொடக்கி வைத்தார்

கோலாலம்பூர், மார்ச் 11-

மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா இன்று 14ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடரை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

இது ஒரு வரலாற்றுப் பூர்வ நிகழ்ச்சியாகும். ஏனெனில், நாட்டின் 16ஆவது பேரரசராக கடந்த ஜனவரி 16ஆம் தேதி பதவியேற்ற பின்னர் மாமன்னர் தொடக்கி வைக்கும் முதலாவது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இதுவாகும்.


காலை மணி 10க்கு நாடாளுமன்ற சதுக்கத்தை வந்தடைந்த மாமன்னர் சுல்தான் அப்துல்லா மற்றும் பேரரசியார் துங்கு ஹாஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தாரியாவை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசாவும் வரவேற்றனர்.

நாடாளுமன்ற சபாநாயகர் டத்தோ முகமது அரிஃப் முகமது யூசோப்பும் மேலவை தலைவர் டான்ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரனும் மாமன்னர் தம்பதியரை வரவேற்றனர்.

RELATED NEWS

Prev
Next