SELANGOR

இ – ஸ்போர்ட்ஸ் உரிம வழிகாட்டி எம்பிஎஸ்ஜே அறிமுகம்

சுபாங் ஜெயா, மார்ச் 5-

இணையம் வழியாக டிஜிட்டல் விளையாட்டு மற்றும் மின்னியல் விளையாட்டு ஆகியவற்றுக்கு உரிமம் வழங்குவதற்கான வழிகாட்டியை சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் (எம்பிஎஸ்ஜே) அறிமுகம் செய்துள்ளது.

இ- ஸ்போர்ட் எனும் மின்னியல் விளையாட்டு அதிகமானோரைக் கவர்ந்துள்ள வேளையில், அதற்கான உரிமம் வழங்கும் சட்ட விதிகள் கடுமையாக்கப்படுவது அவசியம் என்று கழகத்தின் உரிமம் வழங்கும் பிரிவின் இயக்குநர் முகமட் அஸ்லி மிஸ்வான் கூறினார்.

இதன் உரிமம் குறித்த சட்டவிதிகளுக்கான வழிகாட்டி இல்லாததால், இதனை நடத்துபவர்கள் மீது அமலாக்கத் தரப்பினர் நடவடிக்கை எடுக்கும் சூழல் ஏற்படுகிறது. இதன் காரணமாக இவர்களின் வர்த்தகம் பாதிப்படைகிறது என்று அவர் விளக்கம் அளித்தார்.

இ – ஸ்போர்ட்ஸ் நடத்துநர்கள் சட்டவிதிகளுக்கு உட்பட்டு முறையாக செயல்படுவதற்கு இந்த வழிகாட்டி உதவியாக இருக்கும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.


Pengarang :