NATIONAL

எம்எச் 370 விமானம் மாயம் 5 ஆண்டுகளாக நீடிக்கும் மர்மம்!

கோலாலம்பூர், மார்ச் 7-

இந்தியப் பெருங்கடலுக்கு மேல் கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி பறந்து கொண்டிருந்த எம்எச் 370 விமானம் மாயமாக மறைந்து ஆண்டுகள் ஐந்தாகிய போதிலும் அது குறித்த மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை.

கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு 239 பயணிகளுடன் புறப்பட்ட அந்த போயிங் 777 விமானம் ராடாரின் தொடர்பில் இருந்து விடுபட்டு மறைந்து போன சம்பவம் அதில் பயணித்த பயணிகளின் குடும்பத்தினர், நண்பர்கள், விமானப் பணியாளர்கள், அவர்தம் குடும்பத்தினர் ஆகியோரின் மனதில் மட்டுமல்லாது உலகில் பல்லாயிரக் கண்காணோரின் நினைவுகளிலும் இன்னும் பசுமையாய் இருக்கிறது.

இதனைத் தேடும் பணி கடந்தாண்டு மே மாதத்தில் முடிவுற்றது. அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று சம்பந்தப்பட்ட பகுதியில் 112,000 கிலோமீட்டர் பரபளவிற்கு 3 மாத காலம் தேடும் பணியில் ஈடுபட்ட போதிலும் சாதகமான கண்டுபிடிப்புகள் எதுவும் காணப்படாததால் அந்த தேடல் ஒரு முடிவுக்கு வந்தது.

இதுவரையில் , கண்டெடுக்கப்பட்ட சிதைந்த பாகங்களில் மொத்தம் 3 பாகங்களே இந்த விமானத்தைச் சேர்ந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.


Pengarang :