SELANGOR

எம்பிஎஸ்ஏ அபராதங்களுக்கு 50 % கழிவு

ஷா ஆலம், மார்ச் 7-

மாநகராட்சி மன்றத்திடமிருந்து அபராத அறிக்கைகள் பெற்றவர்கள், இந்த மார்ச் மாதத்தில் அவற்றைச் செலுத்தினால் 50 விழுக்காடு கழிவு கொடுக்கப்படும் என்று ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) அறிவித்துள்ளது.

நோட்டீஸ் பெற்றவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கையில் இருந்து தங்களை மீட்டுக் கொள்வதற்கு இந்த சலுகையை மாநகராட்சி மன்றம் வழங்குவதாக அதன் நிறுவன மற்றும் பொது தொடர்பு பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

அதேவேளையில், சாலைப் போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களுக்கு 30 வெள்ளி கழிவு வழங்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.

1983ஆம் ஆண்டு முடித்திருத்தக சட்டம், 2005ஆம் ஆண்டு எம்பிஎஸ்ஏ பூங்கா சட்டம், 2005ஆம் ஆண்டு எம்பி எஸ்ஏ பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும் சட்டம் மற்றும் 2007 ஆம் ஆண்டு எம்பிஎஸ்ஏ உணவுத் தொழில் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றம் புரிந்ததற்கான அபராதத் தொகைகளுக்கு இந்த சிறப்பு கழிவு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Pengarang :