NATIONAL

எம்40 தரப்பினர் வீடுகளை வாங்க சிறப்பு உத்தேச திட்டம்

சைபர் ஜெயா, மார்ச் 9-

நடுத்தர வர்க்கத்தினர் (எம் 40) வீடுகளை வாங்குவதற்கு ஏதுவாக வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அறிமுகப்படுத்தவிருக்கும் சிறப்பு உத்தேச திட்டம் வரும் மே மாதம் தயாராகும் என தெரிவிக்கப்பட்டது.

வருமானத்தின் அடிப்படையில் தங்களின் சக்திக்கு உட்பட்ட வீடுகளை இவர்கள் வாங்குவதற்கு உதவும் வழிகளை வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை ஆராயும் என்று அதன் அமைச்சர் ஜூரைடா கமாருடின் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட சில நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த உத்தேச திட்டத்தை மேற்கொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

“பி 40 திட்டத்தின் தொடர்ச்சியே எம் 40.. இது மேல் நிலை மற்றும் கீழ்நிலை என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன” என்று ஜூரைடா சுட்டிக் காட்டினார்.

” 5,000 வெள்ளி முதல் 10,000 வெள்ளி வரை மேல் நிலை வருமானத்தைப் பெறுபவர்களாகவும் 3,000வெள்ளி தொடங்கி 5,000 வெள்ளி வரை கீழ்நிலை வருமானத்தைப் பெறுபவர்களாகவும் வகை பிரிக்கப்படுவர்” என்று இங்கு உலகளாவிய இயக்கம் ஒன்றைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.


Pengarang :