NATIONAL

கிளந்தானுக்கு அஸ்மின் 3 நாள் அலுவல் பயணம்

ஷா ஆலம், மார்ச் 5-

பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி, நாளை தொடங்கி 3 நாட்கள் கிளந்தான் மாநிலத்திற்கு அலுவல் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

11ஆவது மலேசிய திட்டத்தின் மீதமுள்ள 3 ஆண்டுகளில் அம்மாநிலத்தில் உள்ள இதர பகுதிகளுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க இந்த பயணம் உதவும் என்று அமைச்சின் அறிக்கை கூறியது. மேலும், பக்காத்தான் ஆட்சியில் எந்தவொரு மாநிலமும் பின் தங்கிவிட அனுமதிக்கப்படாது என்றும் அது தெரிவித்தது.

எனவே, இந்த இலக்கை அடையும் வகையில் அனைத்து மாநிலங்களுடன் அணுக்கமான ஒத்துழைப்பை பேண அஸ்மின் அலி ஒவ்வொரு மாநிலத்திற்கும் வருகை மேற்கொள்வார் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

அதேவேளையில், கிளந்தான் மாநில நடவடிக்கை மன்றத் தலைவர் என்ற முறையில் அதன் சந்திப்புக் கூட்டத்திற்கும் அஸ்மின் தலைமையேற்பார். இக்கூட்டத்தில் மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு பரிந்துரைகளும் மேம்பாட்டு நடவடிக்கை திட்ட அறிக்கைகளும் விவாதிக்கப்படும்.


Pengarang :