SELANGOR

கிள்ளான் 41 சட்டவிரோத தொழிற்சாலைகள் முடக்கம்

ஷா ஆலம், மார் 27-

கிள்ளான் நகராண்மைக் கழகம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது சட்ட விரோதமாக இயங்கிக் கொண்டிருந்த 41 தொழிற்சாலைகள் உடனடியாக மூடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சோதனை நடவடிக்கைக்கு அக்கழகத்தின் தலைவர் டத்தோ முகமது யாசிட் பீடின் தலைமையேற்றார்.

அந்த எண்ணிக்கையில் 6 தொழிற்சாலைகள் முழுமையாக மூடப்பட்ட வேளையில் மேலும் இரண்டு தொழிற்சாலைகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

“மேலும், 29 தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் உரிமத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். ஆயினும் உரிமம் கிடைக்கும் வரை சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது” என்றார் அவர்.

இந்த சோதனை நடவடிக்கையில் 20 அமலாக்க அதிகாரிகள் ஈடுபட்டனர் என்றும் சோதனை செய்யப்பட்ட 5 தொழிற்சாலைகளில் 4 உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது என்றும் டத்தோ முகமது தெரிவித்தார்.


Pengarang :