SELANGOR

கிஸ் பெயர்ப் பட்டியலை சரிபார்க்கும் நடவடிக்கை

ஷா ஆலம், மார்ச் 22-

மாநில அரசின் பெடூலி ரக்யாட் திட்டத்திற்கு ஏற்ப சிலாங்கூர் விவேக காசே ஈபு (கிஸ்) திட்டத்தின் கீழ் உதவி பெறுவோரின் பெயர்களை சட்டப்பூர்வ பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை புள்ளிவிபரத் தரவு முறையைக் கொண்டுள்ள தேசிய நிலையிலான இலாகாவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரம், சமூகநலன், மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாஹ்முட் கூறினார்.

இந்த முறையின் பயனாக , சம்பந்தப்பட்ட உதவி பெறுநர்களின் வருமானத்தை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் சொன்னார்.

கிஸ் திட்டத்தில் உதவி பெறுவோரின் பெயர்களை தேசிய ஏழைகள் புள்ளிவிபரத் தரவைக் கொண்டுள்ள பிரதமர் துறையின் இசியூ பெயர் பட்டியலுடன் சரிபார்ப்பதற்கு பிரதமர் துறையின் கீழ் இயங்கும் ஐசியூ கண்காணிப்பு மற்றும் அமலாக்கப் பிரிவு இணக்கம் தெரிவித்துள்ளது என்றார அவர்.

அதேவேளையில், இந்தப் பெயர்ப் பட்டியலை வாழ்க்கை செலவின் உதவி (பிஎஸ்எச்) பெறுவோரின் பெயர் பட்டியலுடன் சரிபார்ப்பதுடன் ஏனைய 17 அரசு அமைப்புகளின் பெயர் பட்டியல்களுடன் சரிபார்க்க உள்நாட்டு வருமான வரி இலாகாவும் தயாராக இருப்பதாக டாக்டர் சித்தி தெரிவித்தார்.


Pengarang :