SELANGOR

கோடை காலத்திற்கு தேவையான குடிநீர் உள்ளது!

ஷா ஆலம், மார்ச் 25-

ஏப்ரல் மாதம் வரை கோடை வெய்யில் நீடிக்கும் என்பதால் மக்களுக்கு விநியோகிக்க போதுமான குடிநீர் கையிருப்பு தங்களிடம் உள்ளதாக சிலாங்கூர் மாநிலம் தெரிவித்தது.

மாநிலத்தில் உள்ள ஏழு முக்கிய நீர் தேக்கங்கள் 95 முதல் 100 விழுக்காடு வரையில் சிறந்த நிலையில் உள்ளன என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

தண்ணீர் சுத்திகரிப்பு குளங்களுக்கு போதுமான தண்ணீரை விநியோகம் செய்யும் அளவில் நீர் தேக்கங்கள் இருந்ததால், 2014 மற்றும் 2015ஆம் ஆண்டு கோடைக் காலங்களில் செயற்கை மழையை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றார் அவர்.

இவ்வாண்டு மார்ச் தொடங்கி ஏப்ரல் வரையில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் கோடை காலத்தில் நாள்தோறும் தேவைப்படும் 4,800 லீட்டர் தண்ணீரை விநியோகிக்கும் அளவிற்கு போதுமான தண்ணீர் நீர் தேக்கங்கள் உள்ளன என்று அமிருடின் உறுதிப்படுத்தினார்.

“அதேவேளையில், நீர் தேக்கங்களில் உள்ள தண்ணீர் கையிருப்பை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கோடை காலத்திற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் தயார் நிலையில் உள்ளோம்” என்றார் அவர்.


Pengarang :