SELANGOR

சட்டவிரோத நெகிழி தொழிற்சாலைகளை மூட எம்டிகேஎல் உத்தரவு

பந்திங், மார்ச் 1-

கோல லங்காட் மாவட்ட மன்றம் அதன் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வந்த சட்டவிரோத நெகிழி தொழிற்சாலையின் நடவடிக்கையை வெற்றிகரமாக முடிக்கியுள்ளது.

கோல லங்காட் மாவட்டம் இனி ஒரு போதும் சட்ட விரோத நெகிழி தொழிற்சாலைப் பகுதியாக இருக்காது என்று அதன் தலைவர் முகமது ஜெயின் ஏ. ஹமிட் உறுதியளித்தார்.

சம்பந்தப்பட்ட தொழிற்சாலை உரிமையாளர்கள் அந்த நிலங்களை மீண்டும் விவசாய நிலங்களாக மாற்றும்படி கோல லங்காட் மாவட்ட நில அலுவலுகம் உத்தரவிட்டுள்ளது என்றார் அவர்.

மொத்தம் 55 தொழிற்சாலைகள் அவற்றின் நடவடிக்கைகளை உடனடியாக முடக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளன என்றும் மேலும் 14 தொழிற்சாலைகள் தங்கள் பகுதிகளில் காணப்படும் குப்பை கூளங்களைத் துப்புரவு செய்யும்படி பணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :