Timbalan Menteri Perumahan dan Kerajaan Tempatan, Datuk Raja Kamarul Bahrin Shah Raja Ahmad. Foto SELANGORKINI
NATIONAL

சட்டவிரோத நெகிழி பொருள் பயனீட்டை துடைதொழிக்க கேபிகேடி உறுதி

ஷா ஆலம், மார்ச் 6-

சட்டவிரோத நெகிழி கழிவுப் பொருட்கள் மீதான அமலாக்க நடவடிக்கை தொடரும் என்றும் கடந்தாண்டு ஜூலை மாதம் அமலுக்கு வந்த இவற்றின் மீதான தடை உத்தரவில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சு (கேபிகேடி) தெரிவித்தது.

நாட்டிற்குள் தருவிக்கப்படும் நெகிழி கழிவுப் பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இருப்பதை இந்த நடவடிக்கை உறுதி செய்யும் என்று துணை அமைச்சர் டத்தோ ராஜா கமாருல் பாஹ்ரின் ஷா கூறினார்.

இந்நடவடிக்கையின் மூலம், எதிர்காலத்தில் நாட்டிற்குள் தரக் குறைவான நெகிழி கழிவுப் பொருட்கள் தருவிக்கப்படுவது முற்றாகத் தடுக்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

எனவே, தரமிக்க நெகிழி பொருட்கள் மட்டுமே தருவிக்கப்படுவது மற்றும் வகுக்கப்பட்ட வழிகாட்டியை இந்தத் தொழில்துறை கடைபிடிப்பதும் உறுதி செய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :