SELANGOR

சிலாங்கூர்கூ வீடுகள் 144 திட்டங்களுக்கு அங்கீகாரம்

ஷா ஆலம், மார்ச் 19-

மாநில அரசின் பொதுக் கூட்ட மன்றத்தின் வாயிலாக மொத்தம் 57,710 சிலாங்கூர்கூ வீடுகளை நிர்மாணிக்க , 2016ஆம் ஆண்டு தொடங்கி கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி வரையில் 144 திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டதாக இன்று மாநில சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது..

அந்தத் திட்டங்களில் 888 சிலாங்கூர் கூ வீடுகளை உட்படுத்திய 3 திட்டங்கள் பூர்த்தியடைந்து விட்டதோடு வீடுகளுக்கான சாவிகளும் ஒப்படைக்கப்பட்டுவிட்டன என்று வீடமைப்பு மற்றும் நகர்ப்புற வாழ்க்கைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஹானிஸா தால்ஹா கூறினார்.

மேலும், 21 வீடமைப்புத் திட்டங்கள் 11,396 வீடுகளை நிர்மாணிக்கும்பணியில் ஈடுபட்டுள்ள வேளையில் 45,426 வீடுகளை உட்படுத்திய 90 திட்டங்கள் இன்னும் திட்டமிடல் பணியில் உட்படுத்தப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.

கிள்ளான் தொகுதி உறுப்பினர் அஸ்மிஸாம் ஜமான் சட்டமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், ஹானிஸா மேற்கண்ட விவரங்களைத் தெரிவித்தார்.


Pengarang :