SELANGOR

சிலாங்கூர் எஸ்பிஆர்எம் கட்டட வளாகத்தை சிலாங்கூர் சுல்தான் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்

ஷா ஆலம், மார்ச் 26-

சிலாங்கூர் செக்‌ஷன் 16இல் நிர்மாணிக்கப்பட்டுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சிலாங்கூர் கிளையின் புதிய கட்டடத்தை மேன்மை தங்கிய சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா இன்று அதிகாரப்பூர்வமாகப் திறந்து வைத்தார்.

2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 41 மில்லியன் செலவில் 7.2 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்ட இந்த கட்டடம் 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எஸ்பிஆர்எம்மிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

ஆணையத்தின் நிர்வாகத்திற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகள் மற்றும் கிடங்குகள் உட்பட பல்வேறு வசதிகளை இந்த ஆறு மாடி கட்டடம் கொண்டுள்ளது.

மேலும், சாட்சிகள் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அளிக்கும் வாக்குமூலங்களை ஒளிப்பதிவு செய்யும் வசதிகள் கொண்ட 12 அறைகள்,அடையாளம் காணும் நடவடிக்கை அறைகள், நூலகம் மற்றும் உடற்பயிற்சி மையங்கள் போன்ற வசதிகளும் இக்கட்டடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


Pengarang :