SELANGOR

சிலாங்கூர் மெரிடைம் கேட்வே திட்டம் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்

ஷா ஆலம், மார்ச் 12-

‘சிலாங்கூர் மெரிடைம் கேட்வே’ எனப்படும் கிள்ளான் நதியை பராமரிக்கும் திட்டமானது மாநிலத்தின் நீண்ட கால பொருளாதாரத் திட்டத்திற்கு வலுச்சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நதியை பராமரிக்கும் மற்றும் மேம்படுத்தும் பணியின் போது போக்குவரத்தை அடிப்படையாகக் கொண்ட பகுதியை தமது தரப்பு அடையாளம் கண்டுள்ளதாக மந்திரி பெசார் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜா ஷாரீன் ராஜா ஒஸ்மான் கூறினார்.

“சிலாங்கூர் மெரிடைம் கேட்வே (எஸ்எம்ஜி) எனப்படும் கிள்ளான் நதியை பராமரிக்கும் திட்டமானது மாநிலத்தின் புதிய பொருளாதாரத் திட்டமாக உருவாகும்” என்றார் அவர்.

தங்கு விடுதி தொழில்துறை, வர்த்தகம், வீடமைப்பு மற்றும் சேவை துறைகளை உட்படுத்தும் நகர உருமாற்றத் திட்டமாகவும் எஸ்எம்ஜி திட்டம் அமைந்துள்ளது என்று ராஜா ஷாரீன் தெரிவித்தார்.


Pengarang :