NATIONAL

செம்பனை எண்ணெய்க்கு ஆதரவளிப்பீர்!

கோலாலம்பூர், மார்ச் 21-

செம்பனை எண்ணெய்க்கும் மலேசியர்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. எனவே, இந்தத் தாவரத்தை ஒதுக்கப்படுவதில் இருந்து தற்காக்கும் பணி அரசுக்கு மட்டுமதல்ல மக்களுக்கும் உண்டு எனத் தெரிவிக்கப்பட்டது.

லட்சக் கணக்கான தோட்டக்காரர்களை வறுமையில் இருந்து மீட்டிய செம்பனைத் தோட்டங்களைத் தற்காக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் தங்களின் ஆதரவை வெளிப்படுத்த 2019ஆம் ஆண்டு மிகவும் பொருத்தமானதாகும்.

அதன் முதல் கட்டமாக வரும் மார்ச் 24ஆம் தேதி சிலாங்கூரில் உள்ள கேரித் தீவில் முதன்மை தொழில்துறை அமைச்சு “எனது செம்பனை எண்ணெய்யை நேசிக்கிறேன்” எனும் இயக்கத்தைத் தொடங்கவிருக்கிறது.

நாட்டில் சமூக பொருளாதாரம், சுகாதாரம், உணவு மற்றும் உணவு அல்லாத பயனீடு ஆகியவற்றின் கவனம் செலுத்தும் மலேசிய செம்பநை எண்ணெய் குறித்து பெருமிதம் கொள்ளும் உணர்வை விதைக்கும் இந்த இயக்கம் அடுத்த ஓராண்டுக்கு தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இயக்கத்தையொட்டி, இந்தத் தாவரத்தின் முக்கியத்துவம், இதனால் மலேசியர்கள் அடையும் பெருமிதம் மற்றும் இந்தத் துறை எதிர்நோக்கும் சவால்கள் ஆகியவை குறித்து பிரதமர் துன் டாக்டர் மகாதீர் ஆற்றிய உரை அடங்கிய காணொளி ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது.


Pengarang :