SELANGOR

சேதமடைந்த வீடுகளைப் பழுது பார்க்க உதவி வழங்கப்படும்

கோம்பாக், மார்ச் 29-

இங்குள்ள 11ஆவது மைலில் வீசிய புயலால் சேதமடைந்த வீடுகளைப் பழுது பார்ப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்கும் என்று அறிவித்துள்ளது.

இந்தப் பேரிடர் குறித்து மந்திரி பெசார் அமிருடின் ஷாரியிடம் தாம் விளக்கியபோது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கோம்பாக் செததியா சட்டமன்ற உறுப்பினர் முகமது ஹில்மான் இடாம் தெரிவித்தார்.

கம்போங் கோம்பாக் உத்தாமாவைத் தவிர்த்து கம்போங் சுங்கை புசு மற்றும் கம்போங் சுங்கை சின்சின் ஆகிய பகுதிகளும் இந்தப் புயலால் பாதிப்புற்றதாக அவர் சொன்னார்.

“இந்த வட்டாரத்தில் நடந்த முதல் சம்பவமாக இது கருதப்படுகிறது. பாதிப்புற்றவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க சம்பதப்பட்ட அரசு இலாகாக்கள் கடப்பாடு கொண்டுள்ளன” என்றார் அவர்


Pengarang :