NATIONAL

தே.மு. அரசின் பெரிய முதலீட்டால் காஸானாவிற்கு பேரிழப்பு -டத்தோஸ்ரீ அஸ்மின் அலி

ஷா ஆலாம், மார்ச் 6-

கஸானா நேஷனல் பெர்ஹாட் ( கஸானா)  தற்போது எதிர்நோக்கியிருக்கும்  இழப்புக்கு முந்தைய அரசாங்கத்தின் முதலீடே மூல காரணம் என்று கூறப்படுகிறது.

இவற்றுள் மிகப் பெரிய இழப்பாக மலேசிய விமான நிறுவனத்தின் பேரிழப்பு பதிவு செய்யப்பட்டிருப்பதாக பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார்.

அந்நிறுவனத்தை சீரமைக்கும் வியூகங்கள் தோல்வி கண்டதைத் தொடர்ந்து 3 பில்லியன் வெள்ளிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக கடந்தாண்டு லாப நஷ்ட கணக்கறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தொடக்கத்தில் கஸானா நிறுவனத்திற்கு 6 பில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டது உண்மையே.. ஆயினும், பக்காத்தான் ஆட்சிக்கு வந்த பின்னர் அதன் சொத்துகள் மற்றும் முதலீடுகளை மறு மதிப்பீடு செய்ததில் சொத்துகளின் மதிப்பு குறைந்ததன் காரணமாக இழப்பீடு 7 பில்லியன் வெள்ளியாக அதிகரித்தது” என்று டுவிட்டரில் அஸ்மின் தெரிவித்தார்.

தாம் பிரதமராகப் பதவி வகித்த 10 ஆண்டுகளில் காஸானா இழப்பைச் சந்தித்தது கிடையாது என்று கூறிய முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கை அஸ்மின் சாடினார்.


Pengarang :