NILAI, March 27– Chairman of the National Water Services Commission (SPAN) Charles Santiago (third, right) during a photo session at The First International Conference on Contemporary Issues 2019 today. Also present Vice Canselor Manipal International Univercity Prof Dr Franco Gandolfi (second, right). –fotoBERNAMA (2019) COPYRIGHT RESERVED
NATIONAL

நாட்டின் நீர் தேக்கங்களில் 80 % குடிநீர் கையிருப்பு

நீலாய், மார்ச் 27-

நாட்டில் தற்போது கடுமையான வெய்யில் நீடித்த போதிலும், நாடு முழுமையும் உள்ள நீர் தேக்கங்களில் தேவையான அளவு தண்ணீர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

கெடாவில் மெர்போக் மற்றும் ஜோகூர் மாநிலத்தில் கோத்தா திங்கி ஆகிய பகுதிகளைத் தவிர்த்து நாட்டின் இதர பகுதிகளில் தண்ணீர் விநியோகம் வழக்க நிலையில் இருப்பதாக தேசிய குடிநீர் சேவை ஆணையத் தலைவர் சார்லஸ் சந்தியாகோ தெரிவித்தார்.

குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே கெடா மெர்போக்கிலும் ஜோகூர் கோத்தா திங்கியிலும் குடிநீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

கெடா மெர்போக்கில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தரம் உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேவேளையில், ஜோகூர் தஞ்சோங் டாவாய் பகுதியில் குழாய் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது என்று டாக்டர் சேவியர் கூறினார்.


Pengarang :