SELANGOR

நாட்டின் பொருளாதாரம் சிலாங்கூரால் மாற்றம் ஏற்படும்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 13-

சிலாங்கூர் மாநில மக்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு மாநிலத்தின் பொருளாதார நிலைத்தன்மைக்கு மட்டுமல்லாது நாட்டின் நிதிநிலையை வலுவாக வைத்திருக்கும் கடப்பாடு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில பொருளாதாரச் சூழல் நாட்டின் பொருளாதாரத்தில் நேரிடை அல்லது மறைமுக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

“2009ஆம் ஆண்டில் நாம் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிய போது நாட்டின் பொருளாதாரமும் தேக்கமடைந்தது” என்று அவர் சொன்னார்.

ஆயினும், 2017ஆம் ஆண்டு மாநில பொருளாதாரம் 71. விழுக்காடு உயர்வு கண்டது. அதே ஆண்டில் தேசிய பொருளாதாரமும் 4.5 – 4.9 விழுக்காட்டில் இருந்து 5.9 விழுக்காடாக உயர்ந்தது என்று அமிருடின் குறிப்பிட்டார்.


Pengarang :