SELANGOR

பிடிஆர்எஸ் மாணவர்களில் 85 % எஸ்பிஎம் தேர்வில் ஏ பெற்றனர்

ஷா ஆலம், மார்ச் 20-

சிலாங்கூர் மக்கள் டியூசன் திட்டத்தில் (பிடிஆர்எஸ்) பயின்ற மாணவர்களில் 85.6 விழுக்காட்டினர் நான்கு பாடங்களில் ஏ பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்படும் இந்தக் கூடுதல் வகுப்பு திட்டம் வாயிலாக தேசிய மொழி, ஆங்கில மொழி, வரலாறு மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் மாணவர்கள் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

இதனிடையே 101.7 விழுக்காட்டினர் பி கிரேடிலும் 97.1 விழுக்காட்டினர் சி கிரேடிலும் 64.1 விழுக்காட்டினர் டி கிரேடிலும் தேர்ச்சி பெற்ற வேளையில் மற்றும் 36.1 விழுக்காட்டின் ஈ கிரேட் பெற்றனர் என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.

“இந்த பிடிஆர்எஸ் திட்டமானது பலவீனமான மாணவர்களை எஸ்பிஎம் தேர்வில் முழு சான்றிதழ் பெறத் தகுதியானவர்களாக உருவாக்குவதே ஆகும்” என்று அமிருடின் விளக்கமளித்தார்.

இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், மேலும் பல இடங்களில் இந்த வகுப்புகள் நடத்தப்படும் என்றும் மேலும் சில பாடங்களும் இந்த வகுப்புகளில் போதிக்கப்படுவதற்கு அரசு திட்டமிட்டு வருவதாக அவர் சொன்னார்.


Pengarang :