SELANGOR

புக்கிட் புருந்தோங், புக்கிட் செந்தோசா தொடர்ந்து மேம்படுத்தப்படும்

ஷா ஆலம், மார்ச் 20-

சொத்துடமையின் மதிப்பை உயர்த்தவும் முதலீட்டு வாய்ப்பை அதிகரிக்கவும் புக்கிட் புருந்தோங் மற்றும் புக்கிட் செந்தோசா பகுதிகளை மறு மேம்பாடு செய்யும் திட்டத்தை உலு சிலாங்கூர் மாவட்ட மன்றம் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

2020 உலு சிலாங்கூர் ஊராட்சி மன்ற திட்டத்தின் கீழ் செரெண்டா மற்றும் சுங்கை பெசார் பகுதிகளில் மேம்பாட்டு நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பொருட்டு சில நிலங்களை எம்டிஎச்எஸ் ஒதுக்கி வைத்துள்ளதாக துறைமுகம், தொழில்துறை மற்றும் சிறு, நடுத்தர வர்த்தகத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

புக்கிட் புருந்தோங் மற்றும் புக்கிட் செந்தோசா நகரங்களின் மேம்பாட்டில் கவனம் செலுத்துவதற்காக இந்த நடைமுறை அமல்படுத்தப்படுவதாக அவர் சொன்னார்.

புக்கிட் புருந்தோங்கில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் டெஸ்கோ விநியோக நிறுவனம் கிடங்கு ஒன்றை திறந்துள்ளது. இதனை ஊராட்சி மன்றம் கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் அங்கீரித்தது என்றும் தெங் தெரிவித்தார்.


Pengarang :