SELANGOR

புறநகர் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரிம3 மில்லியன்

ஷா ஆலம், மார்ச் 22:

புறநகர் உள்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகளை மேம்படுத்த ரிம3 மில்லியன் தொகையை சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஒதுக்கீடு செய்து உள்ளது. இதில் புறநகர் சாலைகள் மறுசீரமைப்பு, கால்வாய்கள் மற்றும் பொது மண்டபங்கள் கட்டுவது அடங்கும் என்று தொழில் முனைவர் மேம்பாடு, புறநகர் மேம்பாடு, கிராம மற்றும் பாரம்பரிய கிராம ஆட்சிக்குழு உறுப்பினர் ரோஸ்ஸியா இஸ்மாயில் கூறினார். இந்த ஒதுக்கீடு மத்திய அரசாங்கத்தின் மலேசிய சாலைகள் விவர பதிவு மையத்தின் (மாரீஸ்) தொகையை சாராத ஒதுக்கீடு என அவர் தெரிவித்தார்.

”  புறநகர் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த, மாநில அரசு உறுதி பூண்டுள்ளது. வருடம் தோறும் மேம்பாட்டு ஒதுக்கீடுகள் பொது வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தி வருகிறோம்,” என்று சிலாங்கூர் மாநில சட்ட மன்ற கூட்டத்தில் ரோஸ்ஸியா இவ்வாறு பதில் அளித்தார்.


Pengarang :