SEREMBAN, 30 Mac — Calon-calon yang disahkan bertanding bagi Pilihan Raya Kecil (PRK) Dewan Undangan Negeri (DUN) N27 Rantau (dari kiri) Datuk Seri Mohamad Hasan (Barisan Nasional), Dr S. Streram (Pakatan Harapan), Mohd Nor Yassin (Bebas) dan R. Malarvizhi (Bebas) pada pengumuman calon di pusat penamaan calon di Sekolah Jenis Kebangsaan Cina (SJKC) Bandar Sri Sendayan hari ini. PRK itu diadakan selepas Mahkamah Khas Pilihan Raya memutuskan kemenangan Mohamad Hasan di kerusi DUN Rantau pada Pilihan Raya Umum ke-14 (PRU14) yang lalu adalah tidak sah dan terbatal. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

ரந்தாவ் இடைத் தேர்தலில் நான்கு முனை போட்டி

சிரம்பான், மார்ச் 30:

ரந்தாவ் சட்ட மன்ற இடைத் தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான், தேசிய முன்னணி மற்றும் இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் இறங்கி நான்கு முனை போட்டியை உருவாக்கி உள்ளனர். ரெம்பாவ் கெஅடிலான் தொகுதி துணைத் தலைவர் டாக்டர் ஸ்ரீ ராம் பாக்காத்தான் ஹாராப்பான் வேட்பாளராக அம்னோவின் தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹாசானை எதிர் கொள்ளும் வேளையில் மேலும் இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். அவர்களில் ஆர் மலர்விழி மற்றும் முகமட் நூர் யாசீன் அடங்குவர்.

 

இதனிடையே,  பண்டார் ஸ்ரீ  சென்டாயான் தேசிய மாதிரி சீனப் பள்ளியில் நடந்த வேட்புமனு தாக்கல் காலை 9 மணிக்கு தொடங்கி 1 மணி நேரத்தில் முடிவடைந்தது.

 

 



எதிர் வரும் ஏப்ரல் 13 இல் வாக்களிப்பு நடைபெறும் என்றும் முன்கூட்டிய வாக்களிப்பு ஏப்ரல் 9 இல் நடைபெற இருக்கிறது என மலேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரந்தாவ் சட்ட மன்ற தொகுதி 29,926 பதிவு பெற்ற வாக்காளர்கள் உள்ளனர். அதில் 29,804 சாதாரண வாக்காளர்களும், 118 முன்கூட்டியே வாக்களிக்கும் வாக்காளர்களும் மற்றும் நான்கு வாக்களிக்க வராத வாக்காளர்கள் அடங்குவர்.


Pengarang :