NATIONAL

வாழ்க்கைச் செலவின உதவி தொகை 3 மில்லியன் பேர் இவ்வாரம் பெறுகின்றனர்

புத்ரா ஜெயா, மார்ச் 29-

2109ஆம் ஆண்டு வாழ்க்கை செலவின உதவி திட்டத்தின் கீழ் இவ்வாரம் தொடங்கி வழங்கப்படவிருக்கும் திருமணமாகாதவர்களுக்கான உதவித் தொகையை மொத்தம் 3 மில்லியன் பேர் பெறவிருக்கின்றனர்.

இந்த உதவித் தொகைக்கென மொத்தம் 300 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

வாழ்க்கைச் செலவின உயர்வைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் பிஎஸ்எச் திட்டத்தின் கீழ் இந்த உதவி தொகையை 3 மில்லியன் பேருக்கு வழங்குகிறது என்றார் அவர்.

கடந்த ஜனவர் 28ஆம் தேதி முதல் கட்ட உதவி தொகையாக 4.1 மில்லியன் குடும்பங்களுக்கு தலா 300 வெள்ளியாக மொத்தம் 1.2 பில்லியன் வெள்ளி வழங்கப்பட்டது என்று குவான் எங் தெரிவித்தார்.

அதேவேளையில், உயர்கல்வி மாணவர்களுக்கான 100 வெள்ளி பேங்க் ரக்யாட் பட்டதாரி கழிவுக் கட்டணப் பற்றுச் சீட்டுக்காக நிதியமைச்சு 120 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.


Pengarang :