NATIONAL

விளையாட்டாளர்கள் கல்வியிலும் மேம்பாடு காண மாரா பல்கலைக்கழகம் உறுதி

ஷா ஆலம், மார்ச் 7-

விளையாட்டாளர்களின் அடைவு நிலையை உறுதி செய்வதோடு மாணவர்களின் கல்வி அடைவு நிலையும் சமமான அளவில் மேம்பாடு காண்பதற்கு மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.

“விளையாட்டாளர்களின் உடலை உறுதியாக வைத்துக் கொள்வதில் மட்டுமல்லாமல் அவர்கள் தங்களை சிறப்பாக நிர்வகிக்க ‘Thinking Athlete’ என்றொரு பாடத் திட்டத்தையும் வடிவமைத்துள்ளோம்” என்று துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் முக்மது அஸ்ரி காசிம் கூறினார்.

இந்தப் பல்கலைக்கழக விளையாட்டாளர்கள் தங்களை விளையாட்டின் போதும் அதற்கு முன்னரும் பின்னரும் நிபுணத்துவத்துடன் நிர்வகிக்கும் திறனைக் கொண்டிருக்கின்றனர் என்றார் அவர்.

விளையாட்டில் தங்கள் எதிராளியை சந்திக்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும் வெல்வதற்கான வியூகம் வகுக்கவும் விளையாட்டாளர் அமைதியான மனநிலையில் இருப்பது அவசியம் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :