அரசியல் கட்சிக்கு ஆதரவு திரட்ட வெ2.7 பில்லியன் செலவிடப்பட்டது -பெல்டா வெள்ளை அறிக்கை | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

அரசியல் கட்சிக்கு ஆதரவு திரட்ட வெ2.7 பில்லியன் செலவிடப்பட்டது -பெல்டா வெள்ளை அறிக்கை

கோலாலம்பூர், ஏப்.10-

பொதுத் தேர்தலில் ஓர் அரசியல் கட்சிக்கு ஆதரவு திரட்ட பெல்டாவின் 2.7 பில்லியன் வெள்ளி பயன்படுத்தப்பட்டதாக பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி தெரிவித்தார்.

சுயேட்சை கணக்காய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல்வேறு விவகாரங்களில் மேற்கண்ட விவகாரமும் அடங்கும் என்று நாடாளுமன்றத்தில் பெல்டா வெள்ளை அறிக்கையை சமர்ப்பித்து அதன் மீதான விவாதத்தை தொடக்கி வைத்தபோது அஸ்மின் கூறினார்.


பெல்டாவின் 8 பில்லியன் வெள்ளி கடன் மற்றும் அதன் நிர்வாக முறைகேடுகள் ஆகியவற்றை ஆராய்வதற்காக இந்த வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டது என்றார் அவர்.

மேலும், சந்தை விலையைக் காட்டிலும் அதிக விலையில் சொத்துடமையை வாங்க பெல்டா நிதி பயன்படுத்தப்பட்டிருந்ததை வெள்ளை அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளதாக அஸ்மின் அலி கூறினார்.

RELATED NEWS

Prev
Next