எம்பிபிஜே 3 டபள்யூ நிகழ்ச்சியில் ஜரினா ஜைனுடின் பங்கேற்பார் | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

எம்பிபிஜே 3 டபள்யூ நிகழ்ச்சியில் ஜரினா ஜைனுடின் பங்கேற்பார்

ஷா ஆலம், ஏப்.3-

மகளிர், சமூக நலன், ஆரோக்கியம் ஆகியவற்றைக் குறிக்கும் 3 டபள்யூ பெருவிழாவின் மூன்றாம் கட்டம் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழகத்தில் நடைபெறவிருக்கிறது.

உலக காசநோய் மற்றும் ஆட்டிஸம் ஆகிய தினங்களைக் கருப் பொருளாகக் கொண்டு நடத்தப்படவுள்ள இந்நிகழ்ச்சி பெட்டாலிங் ஜெயா சதுக்கத்தில் மாலை 6.30 மணி தொடங்கி இரவு 10.30 மணி வரை நடைபெறும்.


ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படும் ஆட்டிஸம் மற்றும் காச நோய் தினங்களைக் கருத்தில் இந்த கருப்பொருள் தேர்வு செய்யப்பட்டதாக இதன் நிறுவனத் தொடர்பு பிரிவின் துணை இயக்குனர் அகமது இஸ்கந்தார் தெரிவித்தார்.

“இந்நிகழ்ச்சியின் உச்ச கட்டமாக நடிகையும் நிகழ்ச்சி தொகுப்பாளருமாகிய ஜரினா ஜைனுடினின் ‘டாக் ஷோ’’வும் இடம்பெறும். ஆட்டிஸம் கண்ட தனது இரு பிள்ளைகளுடனான அனுபவத்தை அவர் இந்நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்வார்” என்று அகமது தெரிவித்தார்.

RELATED NEWS

Prev
Next